Homeசெய்திகள்சினிமா'STR 49' படத்தின் ஷூட்டிங் இந்த தேதியில் தானா?

‘STR 49’ படத்தின் ஷூட்டிங் இந்த தேதியில் தானா?

-

- Advertisement -

STR 49 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'STR 49' படத்தின் ஷூட்டிங் இந்த தேதியில் தானா?

நடிகர் சிம்பு தக் லைஃப் படத்திற்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதன்படி சிம்புவின் 50வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கப் போவதாகவும், சிம்புவின் 51வது படத்தை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது. அதன்படி இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சிம்பு கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகும் அதே வேளையில் சிம்பு படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று புதிய தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகின்றன.'STR 49' படத்தின் ஷூட்டிங் இந்த தேதியில் தானா? இந்நிலையில் STR 49 திரைப்படத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இனிவரும் நாட்களில் இந்த படத்தில் கதாநாயகி போன்ற மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ