spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇவானா நடிக்கும் 'மதிமாறன்' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?

இவானா நடிக்கும் ‘மதிமாறன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -
இவானா நடிக்கும் 'மதிமாறன்' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?
Actress Ivana in Love Today Movie Images HD

நடிகை இவானா பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதற்கு முன்னதாக ஒரு சில மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

மேலும் கடந்த 2022 இல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இவானா. லவ் டுடே திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக மாறிவிட்டார் இவானா. லவ் டுடே படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இவானா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பாக வெளியான எல் ஜி எம் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

we-r-hiring

தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இவானா நடித்துள்ளார். அந்த வகையில் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கும் மதிமாறன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவானா நடிக்கும் 'மதிமாறன்' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?இதில் இவானா உடன் வெங்கட் செங்குட்டுவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டிரைலர் வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் நண்பகல் 12 மணி முதல் மூன்று மணி வரை நடைபெறும் எனவும் அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

MUST READ