கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் கமல் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியது. இப்படத்திசற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
‘நாயகன்’ படத்தை அடுத்து 35 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைகின்றனர். படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது மட்டுமன்றி படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு காணொலியையும் படக்குழு வெளியிட்டது. இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. ரிவர்ஸ் மோசனில் வித்தியாசமாக இந்த காணொலி எடுக்கப்பட்டது.
இந்நிலையில், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடிப்பதால், கால்ஷீட் பிரச்சனை நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு மேல் தான் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.