- Advertisement -
நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் அண்மையில் வெளியாகும் அனைத்து படங்களும் தொடர்ந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. இதனால், அவர் கவலை அடைந்துள்ளார்.

கங்கனா நடிப்பில் கடந்த மாதம் 27ம் தேதி வெளியான திரைப்படம், தேஜஸ். சர்வேஸ் மேவாரா இயக்கிய இந்த திரைப்படத்தில் கங்கனா, விமானப்படை அதிகாரியாக நடித்திருந்தார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே இந்தப் படத்துக்குக் கூட்டம் வரவில்லை. பல திரையரங்குகளில் கூட்டம் இல்லாத காரணத்தால், காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ரூ.60 கோடியில் உருவான இந்தப் படத்திற்கு 5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் கிடைத்து. இந்தப் படத்தோடு சேர்ந்து கங்கனா நடித்துள்ள, 10 படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துள்ளன.




