குபேரா பட இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் குறித்து பேசியுள்ளார்.
தனுஷின் 51வது படமாக குபேரா திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் தனுஷ் தேவா என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முதல் பாடல் வெளியான நிலையில் இன்று (ஜூன் 2) இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் நேற்று (ஜூன் 1) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “குபேரா படம் நல்லா வந்திருக்கு. தனுஷ் இன்னொரு தேசிய விருதை பெறுவார் என்று நினைக்கிறேன். அவரை தவிர வேறு யாராலும் இந்த கேரக்டரை செய்திருக்க முடியாது. இது ஒரு சமூக – அரசியல் திரில்லர் படம். பெரிய பான் இந்திய படம்” என்று தெரிவித்துள்ளார்.