Homeசெய்திகள்சினிமாதனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் 'குபேரா'.... லேட்டஸ்ட் அப்டேட்!

தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் ‘குபேரா’…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

குபேரா திரைப்படம் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் 'குபேரா'.... லேட்டஸ்ட் அப்டேட்!கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ராயன் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷ், இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இப்படமானது 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. மேலும் தேரே இஷ்க் மெய்ன், இளையராஜாவின் பயோபிக் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தனுஷ். இதற்கிடையில் இவர், பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அரசியல் திரில்லர் ஜானரில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் தவிர நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் 'குபேரா'.... லேட்டஸ்ட் அப்டேட்!இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படம் 2025 ஜூலை மாதம் 28ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு திரைக்கு வரும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ