Homeசெய்திகள்சினிமாமூன்றாவது வாரத்தில் 'லால் சலாம்'..... லைக்கா நிறுவனம் வெளியிட்ட புகைப்படம் வைரல்!

மூன்றாவது வாரத்தில் ‘லால் சலாம்’….. லைக்கா நிறுவனம் வெளியிட்ட புகைப்படம் வைரல்!

-

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் தான் லால் சலாம். இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். 'லால் சலாம்' படக்குழுவுடன் ரஜினி..... வைரலாகும் புகைப்படம்!ரஜினிக்கு மனைவியாக நிரோஷா நடித்திருந்தார். மேலும் லிவிங்ஸ்டன், செந்தில், தம்பி ராமையா, அனந்திகா ஜீவிதா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்த படத்தை லைக்கா ப்ரோடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருந்தார். படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனித்தார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மத நல்லிணக்கத்தை எடுத்து கூறும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ள லால் சலாம் படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்காக நன்றி தெரிவித்து லைக்கா நிறுவனம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து ஏ ஆர் ரகுமான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட லால் சலாம் பட குழுவினர் இருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ