Homeசெய்திகள்சினிமாரசிகர்களுக்கு தரமான சம்பவம் காத்திருக்கு..... 'ராயன்' படம் குறித்து காளிதாஸ் ஜெயராம்!

ரசிகர்களுக்கு தரமான சம்பவம் காத்திருக்கு….. ‘ராயன்’ படம் குறித்து காளிதாஸ் ஜெயராம்!

-

தனுஷின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகியுள்ள படம் ராயன். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரசிகர்களுக்கு தரமான சம்பவம் காத்திருக்கு..... 'ராயன்' படம் குறித்து காளிதாஸ் ஜெயராம்!வடசென்னையை மையமாக வைத்து ஒரு மாஸான கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து படக்குழுவினர் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் குறித்து காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியிருக்கிறார். ரசிகர்களுக்கு தரமான சம்பவம் காத்திருக்கு..... 'ராயன்' படம் குறித்து காளிதாஸ் ஜெயராம்!அதாவது, “தனுஷ் சாருடன் திரை இடத்தை பகிர்ந்து கொள்வதில் ஆவலுடன் இருக்கிறேன். நான் அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன். இப்போது அவருடன் நடித்தது என்னுடைய கனவு நனவான தருணம். தனுஷ் சார் ஒரு சிறந்த நடிகர் என்பதை தாண்டி சிறந்த படத்தை உருவாக்குபவர். அவரை கமல்ஹாசன் சாருக்கு இணையாக பார்க்கிறேன். ராயன் படத்தில் ரசிகர்களுக்கு ஒரு தரமான சம்பவம் காத்திருக்கு” என்று பேசியுள்ளார்.

இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் தூண்டி உள்ளது.

MUST READ