Homeசெய்திகள்சினிமாமிகவும் எதிர்பார்க்கப்படும் 'குட் பேட் அக்லி' முதல் பாடல்.... ரிலீஸ் தேதி இதுதானா?

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘குட் பேட் அக்லி’ முதல் பாடல்…. ரிலீஸ் தேதி இதுதானா?

-

- Advertisement -

குட் பேட் அக்லி முதல் பாடல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் 'குட் பேட் அக்லி' முதல் பாடல்.... ரிலீஸ் தேதி இதுதானா?

தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அதைத் தொடர்ந்து இவர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா ஆகிய படங்களை இயக்கியிருந்தாலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தான் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து ஆதிக், அஜித் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். அஜித்தின் 64 வது படமான இந்த படத்திற்கு
குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி.வி. பிரகாஷின் இசையிலும் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தது. அஜித்தின் விண்டேஜ் படங்களின் குறியீடுகள் இடம் பெற்றிருந்த இந்த டீசர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. மிகவும் எதிர்பார்க்கப்படும் 'குட் பேட் அக்லி' முதல் பாடல்.... ரிலீஸ் தேதி இதுதானா?எனவே அடுத்தபடியாக இந்த படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த பாடலுக்கு ஓஜி சம்பவம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் அப்டேட் கொடுத்திருந்தார். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் வெளியாகும் என சமீபகாலமாக தகவல் வெளியாகி வந்த நிலையில் வருகின்ற மார்ச் 13 அல்லது 14ஆம் தேதி இப்பாடல் வெளியாகும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ