Homeசெய்திகள்சினிமாஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'NTR 31' படம் குறித்த புதிய அப்டேட்!

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘NTR 31’ படம் குறித்த புதிய அப்டேட்!

-

- Advertisement -

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘NTR 31’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'NTR 31' படம் குறித்த புதிய அப்டேட்!தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடைசியாக தேவரா திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி இந்த படத்திற்கு தற்காலிகமாக NTR 31 (NTRNeel) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'NTR 31' படம் குறித்த புதிய அப்டேட்! அதன்படி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக தொடங்கியது. அதைத்தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் ஏப்ரல் 22 அன்று ஜூனியர் என்டிஆர் இணைவார் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'NTR 31' படம் குறித்த புதிய அப்டேட்!அதன்படி இன்று ஜூனியர் என்டிஆர் இப்படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகின்றன. எனவே ரசிகர்களும் என்பதை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் இப்படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'NTR 31' படம் குறித்த புதிய அப்டேட்!அதேசமயம் இந்த படத்திற்கு ‘டிராகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தவிர இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார் என்பதும் புவன் கௌடா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ