விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய 4 படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றதால் லியோ மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே நிலவி வருகிறது. லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், பிரியா ஆனந்த், கௌதம் மேனன் என பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் அதைத் தொடர்ந்து முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் லியோ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில் தற்போது திரிஷாவின் பர்ஸ்ட் லுக்கை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சஞ்சய் தத் மற்றும் அர்ஜுனின் கிளிம்ஸ் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -