spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலவ்வர் படத்திலிருந்து மூன்றாவது பாடல் ரிலீஸ்

லவ்வர் படத்திலிருந்து மூன்றாவது பாடல் ரிலீஸ்

-

- Advertisement -
மணிகண்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் லவ்வர் படத்திலிருந்து மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது.

கோலிவுட்டில் சொற்ப படங்களே நடித்திருந்தாலும், மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் சில நேரங்களில் சில மனிதர்கள், உள்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ஜெய் பீம் திரைப்படம் அவரது புகழை உச்சத்திற்கு கொண்டு சேர்த்தது. ஞானவேல் இயக்கிய இத்திரைப்படம், பெரும் வெற்றி பெற்றது. இதில் மணிகண்டனின் நடிப்பு ஏகபோக வரவேற்பை பெற்றது

we-r-hiring
இதைத் தொடர்ந்து மணிகண்டனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அடுத்து அவர் நடித்த குட் நைட் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் படம் வரவேற்பை பெற்றது. தற்போது அறிமுக இயக்குநர் பிரபுராம் விியாஸ் எழுதி இயக்கியிருக்கும் லவ்வர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகௌரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன. தற்போது படத்திலிருந்து மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை சித்தார்த் பாடி இருக்கிறார். லவ்வர் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வெளியாகிறது.

MUST READ