கிரிக்கெட் கதைக்களத்தில் புதிய படம்… மேடி-க்கு ஜோடியாகும் நயன்தாரா!

நயன்தாரா மற்றும் மாதவன் ஜோடி புதிய படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்றுக்கொண்டனர். தற்போது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட்டு வருகின்றனர்.

நயன்தாரா தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘இறைவன்’ படத்தில் நடித்து வருகிறார். அஹமத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் புதிய படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Test

தாயரிப்பாளர் சஷிகாந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்.  ‘தி டெஸ்ட்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளதாம்.

இதற்கிடையில் நடிகர் மாதவன்  ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது விஞ்ஞானி ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement