சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘விடுதலை’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘விடுதலை‘ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் வாத்தியார் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரின் இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.
படத்திற்கு பல தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
“விடுதலை … இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம் ! சூரியின் நடிப்பு – பிரமிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி படக்குழுவினர் மற்றும் வெற்றிமாறன் உடன் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வரும் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.