Homeசெய்திகள்வெற்றிமாறன்- சூரி கூட்டணியின் விடுதலை... முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

வெற்றிமாறன்- சூரி கூட்டணியின் விடுதலை… முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

-

வெற்றிமாறன் மற்றும் சூரி கூட்டணியில் வெளியாகியுள்ள ‘விடுதலை’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து தெரியவந்துள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது இந்திய அளவில் கவனம் பெற்றுள்ள இயக்குனராக உருவெடுத்துள்ளார். எனவே அவரது இயக்கத்தில் வெளியாக இருக்கும் படங்களுக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அந்த வகையில் சூரியை கதாநாயகனாக வைத்து வெற்றிமாறன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியானது.

soori

வெளியானது முதல் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சூரி காமெடியன் என்ற பிம்பத்தை இந்தப் படத்தில் உடைத்து எறிந்துள்ளார். இனி வரும் நாட்களில் அவரை பல படங்களில் கதாநாயகனாக பார்க்கலாம்.

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் நாள் வசூல் குறித்த நிலவரம் வெளிவந்துள்ளது. முதல் நாளில் விடுதலை திரைப்படம் 3.5 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

விடுதலை படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கௌதம் வாசுதேவன் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்

MUST READ