‘விடுதலை’ படத்திற்கு கிடைத்த அபார வரவேற்பை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள விடுதலை திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அபார வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரின் இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.
வழிநெடுக காட்டு மல்லி உள்ளிட்ட பாடல்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பபை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இருவரும் இளையராஜாவை சந்தித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் புகைப்படங்கள் இணையத்தில் வரலாகி வருகின்றன.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.