spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழுக்கான போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி - சிவகார்த்திகேயன்

தமிழுக்கான போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி – சிவகார்த்திகேயன்

-

- Advertisement -

நமது முன்னோர்கள் நமது மொழிக்காக தமிழுக்காக நடத்திய போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் பராசக்தி திரைப்படத்தின் முயற்சி என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.தமிழுக்கான போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி - சிவகார்த்திகேயன்

பராசக்தி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் பட குழுவினர் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்கில் ரசிகர்களோடு படத்தை பார்த்தனர் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் கதாநாயகி ஸ்ரீ லீலா இயக்குனர் சுதா கொங்காரா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

we-r-hiring

படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் படம் பார்த்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், இத்திரைப்படத்தை எடுக்கும் போதே மிகுந்த எமோஷனோடு இருந்ததாகவும் இந்த காலகட்டத்தில் குறிப்பாக பொங்கல் விடுமுறையை முன்னிட்டு திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் எங்கள் சார்பிலும் திட்டமிட்டதாக அவர் கூறினார். நமது முன்னோர்கள் தமிழுக்காக நம் மொழிக்காக போராடியதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்த திரைப்படம் என்றார். ஜனநாயகன் திரைப்படம் என்று திரைக்கு வருகிறதோ அன்றைய தினம் கொண்டாட்டம் தான் என்றும் திரைப்படம் திரையுலகிர்க்கும் திரையரங்குகளுக்கும் மிக முக்கியமான படம் என்றும் விரைவில் அப்படம் வெளியாகும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா பேசுவையில் , எந்த மாநிலங்களில் என்ன மொழி பேசவேண்டுமோ, அங்கே அம்மோழிகளை பேச வேண்டும் என்று குழந்தைகள் சொல்கிறார்கள் அதுதான் இத்திரைப்படத்தின் வெற்றி என்றார். ஜனநாயகம் திரைப்படம் வெளியாகாதது தொடர்பான கேள்விக்கு, திரைப்படம் வெளியாகாமல் போனது தனக்கும் வருத்தம் தான் என்றும் வெளியாகி இருந்தால் நானும் முதல் நாள் முதல் காட்சி பார்த்திருப்பேன் என்றார்.

இவர்களைத் தொடர்ந்து, படத்தின் கதாநாயகி ஸ்ரீ லீலா பேசுகையில் , தமிழ் ரசிகர்களின் அன்பு தனக்கு அதிகமாக உள்ளது என்றும்,இப்படி ஒரு தருணத்தை நான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார். ஒவ்வொரு வசனத்திற்கும் ரசிகர்கள் கொடுக்கும் பாராட்டுக்கள் மகிழ்ச்சியாக உள்ளது. முதல் முறையாக தமிழ் ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இது போன்ற பல நல்ல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக அவர் கூறினார். அடுத்து நடிக்க உள்ள தமிழ் படம் தொடர்பாக விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தற்போது தொடர்ச்சியாக பராசக்தி படத்தை பார்த்து வருவதாக அவர் கூறினார்.

ஜனநாயகன் விவகாரம்…தனிநீதிபதி உத்தரவுக்கு தடை…உச்சநீதிமன்றத்தை நாடும் படக்குழு…

MUST READ