spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகமல் பெயர், புகைப்படங்கள் வர்த்தக ரீதியில் பயன்படுத்த தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

கமல் பெயர், புகைப்படங்கள் வர்த்தக ரீதியில் பயன்படுத்த தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -

கமலின் பெயர், புகைப்படத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கமல் பெயர், புகைப்படங்கள் வர்த்தக ரீதியில் பயன்படுத்த தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

கமல்ஹாசனின் அனுமதியின்றி ”நீயே விடை” என்ற நிறுவனம் அவரது பெயர், புகைப்படம், பிரபல வசனத்தை பயன்படுத்தி டி-சர்ட்கள், சர்ட்ளை விற்பனை செய்துவருவதாக  கூறி கமல்ஹாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் வேறு எந்த நிறுவனமும் கமல் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்கவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்த  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கமல்ஹாசன் பெயர் மற்றம் புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் கார்ட்டூன்  வடிவிலான படங்களை பயன்படுத்த தடையில்லை என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தாா்.

” மேலும், இந்த வழக்கு தொடர்பாக  ”நீயே விடை” வணிக நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை வருகின்ற பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

சமத்துவப் பொங்கல்: மாட்டு வண்டி ஓட்டி, மாணவர்களுடன் நடனமாடி அசத்திய நடிகர் சூரி!

MUST READ