கணவர் நடித்த படத்தை பார்ப்பதற்கு குரோம்பேட்டை வெற்றி திரையரங்கிற்கு வந்த சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி வருகை புரிந்துள்ளார்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகியுள்ளது பராசக்தி. டான் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன், ஶ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளார்கள். ஜிவி பிர்காஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள பராசக்தி படத்தின் மீது கமர்சியலாகவும், அரசியல் ரீதியாகவும் பல எதிர்ப்பார்ப்புகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று 9 மணி அளவில் முதல் காட்சி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்கிற்கு முன்பு குவிந்து மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கிற்கு முன்பாகவும் ரசிகர்கள் குவிந்து மேல தளங்களுடன் நடனமாடி கொண்டாடி வருகின்றனர். மேலும் திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம் ரசிகர்கள் செய்தனர்.

மேலும் தன் கணவர் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி திரைப்படத்தை காண்பதற்காக வெற்றி திரையரங்கிற்கு நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி வருகை புரிந்துள்ளார். எப்போதும் முக்கிய பிரமுகர்கள் பல வெளியாகும் போது அதில் நடித்த முக்கிய நடிகர்கள் வெற்றி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் படம் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இன்று பராசக்தி படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் யாராவது வெற்றி திரையரங்கருக்கு வருகிறார்களா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து குவிந்துள்ளனர்.


