பராசக்தி திரைப்படம் திமுக வரலாற்றுக்கு இடப்பட்ட வெற்றித் திலகம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.
பராசத்தி திரைப்படத்தை பார்த்த பின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் எம்.பி.கடிதம் எழுதியுள்ளாா். அக்கடிதத்தில், ”பராசக்தி” படம் திமுக கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலில் மாபெரும் முரசொலியாக ஒலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், பராசக்தி படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட என்று தெரிவித்துள்ளாா். சமூக சிந்தனை, மொழி விழிப்புணர்வு மற்றும் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளதாக அவர் பாராட்டியுள்ளாா்.
சுதா கொங்கரா, சிவக்கார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலிலா உள்ளிட்டோருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளாா். அதேபோன்று, ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளை கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.
தமிழுக்கான போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி – சிவகார்த்திகேயன்


