spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபாஜகவிற்காக வடிவமைக்கப்பட்ட பராசக்தி ஸ்கிரிப்ட்...

பாஜகவிற்காக வடிவமைக்கப்பட்ட பராசக்தி ஸ்கிரிப்ட்…

-

- Advertisement -

சாவித்திரி கண்ணன்பாஜகவிற்காக வடிவமைக்கப்பட்ட பராசக்தி ஸ்கிரிப்ட்...ஒரு படைப்பு எந்த காலகட்டத்தில் கொண்டு வரப்படுகிறது என்பது முக்கியம்!  டாஸ்மாக் முறைகேடுகள், அதில் ஆகாஷ் பாஸ்கரனின் பங்கு, தலைமறைவு, மறைமுகமாக நடந்தேறிய பேரங்கள், இதன் பிறகு நீதிமன்றம் வழியே..விடுவிக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு…எல்லாமே ஆடிட்டர் ஸ்கிரிப்ட் தானா?

இன்றைக்கு இந்தி திணிப்போடு, சமஸ்கிருத திணிப்பும், சனாதன மேலாதிக்கமும் பாய்ச்சலோடு நடக்கின்ற சூழலில் புதிய பராசக்தி வந்துள்ளது.

we-r-hiring

நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சி என்பது பாஜக எதிர்ப்பைப் பேசிக் கொண்டே பாஜகவின் அஜந்தாக்களை அச்சுபிசகாமல் நிறைவேற்றித் தரும் ஆட்சியாக உள்ளது என்பதை தொடர்ந்து ஆழமான வருத்தத்துடன் எழுதி வருகிறேன்.

இந்தப் படம் இந்தி எதிர்ப்பில் உணர்வுபூர்வமாக, சித்தாந்த ரீதியில் போராடியவர்களின் வரலாற்றுக்கும் நியாயம் சேர்க்கவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் எடுத்த நிலைபாட்டையும் உண்மை சார்ந்து சொல்லவில்லை.

முதல் காட்சியே பொது சொத்தான ரயிலுக்கு தீ வைக்கும் காட்சி. அதுவும் எந்தப் பாவமும் அறியாத அப்பாவி பயணிகள் நடு வழியில் உயிரைக் காப்பாற்ற ஓடும் காட்சி. அதாவது இந்தி எதிர்ப்புக்காக போராடி உயிர் நீத்த மாணவர்களை சமூக விரோதிகளாக சித்தரிக்கும் காட்சி.

அப்போது தொடங்கி இந்தப் படம் தனிப்பட்ட ஒரு வட இந்திய போலீஸ் அதிகாரிக்கும், கதாநாயகனுக்குமான தனிப்பட்ட மோதலாக பயணித்து  திசை மாற்றப்பட்டுவிட்டது. இடையிடையே சாகஸமான சண்டைகள், சகோதர செண்டிமெண்ட், தெலுங்கு காதலியோடு டூயட்… என்று கமர்சியல் மசாலா. அத்துடன் வரலாற்றுக்கே சம்பந்தமில்லாத இந்திய தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல மாநில போராட்டவாதிகளாக வரும் பான் இந்தியா ஸ்டார்கள். அதாவது இது தமிழர்கள் மட்டுமே நடத்திய தனித்துவமான மொழிப் போராட்டம் என்பதை அழிக்கும் முயற்சி.

அது சரி, தமிழ் மொழி காக்க நடந்த தியாக வரலாற்றை, சாவார்க்கரே பெண் விடுதலைக்கு இந்தியாவில் முதன் முதலாக வித்திட்டவர் என்று சொல்லிய, தெலுங்கு பாப்பாத்தி சுதாகொங்கராவை இயக்குனராக வைத்து எடுக்க நிர்பந்தித்தது யார்?

அவரோ சன் டிவிக்கு தந்த பேட்டியில் காஷ்மீர் பைல்ஸும், கேரளா ஸ்டோரியும் எப்படி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணர எடுக்கப்பட்டதோ, அதே தன்மையில் எடுக்கப்பட்டதே பராசக்தி என்று சொல்லியதன் மூலம், “பாஜகவின் அஜந்தாவைத் தான் நான் இதில் நிறைவேற்றி உள்ளேன்” என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

இதற்காகத் தான் பராசக்தி ஸ்கிரிப்ட் மயிலாப்பூர் மாதவ பெருமாள் அக்கிகாரத்தில் உள்ள ஆடிட்டரிடம் காட்டி ஒப்புதல் வாங்கப்பட்டதா?

இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பை சொல்ல வந்த படம் எந்த காலகட்டத்தில் அதை சொல்ல வந்தது என்பதை புரிந்து கொண்டால், இந்த சூட்சுமம் புரியும்.

2025 மார்ச் மாதம் அமலாக்கத்துறை தமிழக டாஸ்மாக் தொடர்பான இடங்களில் மட்டுமின்றி அதன் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் திரட்டப்பட்டு, சட்டவிரோதமாக பலருக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பாட்டில் நிறுவனங்களிடம் போலியான பர்ச்சேஸ் ஆணைகள் பெறப்பட்டுள்ளன. கணக்கில் வராமல் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன” என்று அமலாக்கத்துறை தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

திமுக ஆட்சி பதவி ஏற்றதில் இருந்து  சுமார் 500 மனமகிழ் மன்றங்களும், உயர்ரக பார்களும் ஏற்படுத்தப்பட்டு அவற்றுக்கு மதுபான உற்பத்தி ஆலைகளில் இருந்து சரக்கு அரசு கணக்கிற்கு வராமலே கடத்தப்பட்டு விற்கப்பட்டு ஆளும் ஆட்சியாளர்களின் குடும்பத்திற்கு கொண்டு செல்வதான புகார்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தன. ஆனால் கடந்த நான்காண்டுகளாக டாஸ்மாக்கின் பல நிலைகளில் ரெய்டு நடத்தியும் அமலாக்கத்துறை இது தொடர்பாக எப்.ஐ.ஆரோ, வழக்கோ கூட பதியவில்லை. இதில் இருந்து மத்திய பாஜகவிற்கும், மாநில திமுகவுக்குமான பரஸ்பர புரிதல்களை நாம் அறியலாம்.

அதே சமயம் டாஸ்மாக் தலைமையகத்திலேயே உதய நிதியின் நண்பர்கள், குறிப்பாக ஆகாஷ் பாஸ்கரன் போன்றோர் அதிகாரம் செலுத்தி  முறைகேடாக பணம் ஈட்டி சினிமா வியாபாரத்தில் ஈடுபடுவதாக புகார்கள் வெளியாயின.

இதையடுத்து மே மாதம் டாஸ்மாக்கின் மேலாண்மை இயக்குனர் விசாகனின் செல்போனிலும், லேப்டாப்பிலும் பார்த்த வகையில் திமுக குடும்பத்தின் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் அவர் நண்பர்களின் கட்டளைகளை ஏற்று விசாகன் செயல்பட்டதும் அறியப்பட்டதைத் தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிற்கு ரெய்டு சென்ற போது அவர் வீட்டை பூட்டிவிட்டுத் தலைமறைவானார்.

அப்போதே அவர் சிவகார்த்திகேயனை வைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சொல்லும் பராசக்தி படம் எடுக்க போவதான செய்தியும் வெளியானது. தலைமறைவான அவர் கைதாவது உறுதி என்ற நிலையில் என்ன பேரம் நடந்ததோ… தெரியவில்லை. இதற்கு பிறகு அவர் நீதிமன்றத்தை அணுகினார்.

உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை சோதனைக்கு தடை போட்டது. நவம்பர் மாதம் அந்த தடையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் எதையும் நீதிமன்றத்தில் அமலாக்கதுறை சமர்பிக்காததால் ஆகாஷ் பாஸ்கரன் கைதில் இருந்து தப்பினார்.

இந்த காலகட்டத்தில் தான் பராசக்தி படம்  தங்கள் அஜந்தாவை நிறைவேற்றும் வகையில் எடுத்தால் விடுவிக்கத் தயார் என்ற பேரங்கள் அரங்கேறி இருக்கிறது. ஆடிட்டர் குருமூர்த்தியிடம் ஸ்கிரிப்ட் காட்டப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்டதாகவும். அவர் நிர்பந்தித்தன் பேரில் தான் முதல் காட்சியிலேயே மாணவர்களை சமூக விரோதிகளாக சித்தரிக்கும் பயணிகள் வரும் ரயில் எரிப்பு சம்பவம், காங்கிரஸ் ஆட்சி மீதான வெறுப்பை, வன்மத்தை உருவாக்குவது போன்றவை வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சொல்லியவற்றையெல்லாம் கச்சிதமாக செய்த வகையில் பராசக்தி படக் குழு டெல்லியில் மோடியுடன் பொங்கல் விழா கொண்டாட அழைக்கப்பட்டுள்ளது.

இந்தியோடு சமஸ்கிருத திணிப்பையும், வட இந்தியர்களின் குடியேற்றத்தையும் ஒரு பாய்ச்சலாக தமிழகத்தில் செய்து கொண்டிருக்கும் பாஜகவினர் இந்தி திணிப்பிற்கு எதிராக எடுப்பட்டதாக சொல்லப்படும் பராசக்தி படக் குழுவை அழைப்பானேன்? அந்த அழைப்பை ஆனந்தமாக ஏற்றுக் கொண்டு இவர்களும் செல்வானேன்?

55 வருட திராவிட இயக்க ஆட்சியில் பள்ளி,கல்லூரிகளில் தமிழ் மறைந்து ஆங்கிலமே மேலோங்கி, தமிழே தெரியாத தலைமுறைகளை உருவாகியுள்ளதை திசைமாற்ற, தமிழக வங்கிகள், தபால் அலுவலகங்கள், ரயில்வேயில், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் இன்று பெருமளவு வட இந்தியர்களை வலிந்து பணியில் அமர்த்தி வரும் மத்திய பாஜக அரசின் மீதான கோபத்தை மடைமாற்ற, நடக்கின்ற ஆட்சியில் தமிழகத்தில் சிப்காட் தொழில் பூங்கா என விவசாயிகளின் பல்லாயிரம் ஏக்கர் நன்செய் நிலத்தை வலிந்து பிடுங்கி வெளிநாட்டு, வட இந்திய முதலாளிகளுக்கு தாரைவார்த்து, அந்த தொழிற்சாலைகளில் 80 %  வட இந்தியர்களுக்கு வேலை தந்துள்ள சதியை பேசவொட்டாமல் செய்ய, தமிழக இளைஞர்களுக்கெல்லாம் எந்த தார்மீக கோபாவேசங்களும் ஏற்படாமலிருக்க டாஸ்மாக் வெள்ளத்தில் அவர்களை பிளாட்டாக்கிவிட்டு, கலைத் துறையையும் காயடித்துவிட்டு, மோடியுடன் பொங்கல் கொண்டாடுகிறீர்களே நியாயமா?

அரசியலில் பாஜகவிற்கு செய்து வந்த அடிமை சேவகத்தைத் தான் கலைத் துறையிலும் பராசக்தி படம் மூலமாக திமுக குடும்பம் செய்து தந்துள்ளது.

சென்னையில் முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து மாற்றங்கள்.. காவல்துறை அதிரடி…

MUST READ