Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் வெங்கட் பிரபு திடீரென கைது... உண்மை என்ன!?

இயக்குனர் வெங்கட் பிரபு திடீரென கைது… உண்மை என்ன!?

-

இயக்குனர் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது.‌

தற்போதைய இன்டர்நெட் ட்ரெண்டிங் என்னவென்றால் இயக்குனர் வெங்கட் பிரபு கைது என்ற செய்தி தான். அதில் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி விவரங்கள் விரைவில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Custody

எனவே இது அவர் தற்போது இயக்கி வரும் புதிய படத்தின் ப்ரோமோஷனாக இருக்கலாம் என்று பலர் தெரிவித்தனர். கடைசியில் அது தான் உண்மையாகியுள்ளது.

வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து ‘கஸ்டடி’ படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காகத் தான் இப்படி ஒரு செய்தியை பரப்பியுள்ளனர்.

அதில் வெங்கட் பிரபு லாக்கப்பில் இருக்கிறார். நாகசைதன்யா அவரை விசாரிக்கிறார். படத்தின் டீசர் அப்டேட்டை வித்தியாசமான முயற்சியில் வெளியிட்டுள்ளனர்.

கஸ்டடி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. க்ரித்தி ஷெட்டி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

 

 

 

MUST READ