Homeசெய்திகள்சினிமாபிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடி ஆவாரா நயன்தாரா!

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடி ஆவாரா நயன்தாரா!

-

விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடி ஆவாரா நயன்தாரா!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்னுநர்களில் ஒருவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

பின்னர், நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குகள் இரண்டு காதல் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் நெற்றிக்கண், கூழாங்கள், காத்து வாக்குகள் இரண்டு காதல், என அடுத்தடுத்த படங்களை தயாரித்து வந்தனர்.

இந்நிலையில், ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கை நழுவி போனது. அடுத்ததாக விக்னேஷ் சிவன் லவ் டூடே படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக வைத்து படம் இயக்கப் போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் இடையில் வைரலாகி வருகிறது.

MUST READ