Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா... புதிய முன்னோட்டம் ரிலீஸ்...

விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா… புதிய முன்னோட்டம் ரிலீஸ்…

-

 விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் மகாராஜா. இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து இருக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்
படத்தில், விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது. அண்மையில் இந்த படத்தின் டிரைலரும் வெளியானது. மகாராஜா திரைப்படம் வரும் ஜூன் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, படத்துக்கான புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி துபாய், ஐதராபாத், சென்னை என மாறி மாறிபடக்குழு புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் படத்தின் ரிலீஸ் டிரைலரை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.

MUST READ