Homeசெய்திகள்சினிமாமுன்பதிவில் அசத்தும் மலைக்கோட்டை வாலிபன்!

முன்பதிவில் அசத்தும் மலைக்கோட்டை வாலிபன்!

-

- Advertisement -
மலையாளத்தில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டார் மோகன்லால். மோலிவுட் ரசிகர்கள் மட்டுமன்றி நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலகினர் அனைவராலும் லாலேட்டன் என்று அன்புடன் அழைக்கப்படுவார். 80-களில் தொடங்கி இன்று வரை நூற்றுக்கணக்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மோகன்லால் இறுதியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். ரஜினியுடன் இணைந்து அவர் நடித்திருப்பார். அப்படம் வரவேற்பையும் பெற்றது.

இதைத் தொடர்ந்து நெரு திரைப்படம் மோகன்லால் நடிப்பில் இறுதியாக வெளியானது. இப்படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து பிருத்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாய், லண்டன், கேரளா என அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பல படங்களில் மோகன்லால் கமிட்டாகி தொடர்ந்து இடைவெளி இல்லாமல் நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் மற்றொரு திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன். இப்படத்தை ஜல்லிக்கட்டு, சுருளி, அங்கமாலி டைரிஸ் பட இயக்குநர் லிஜோ ஜோஸ் இயக்கி இருக்கிறார். இதில் மோகன்லாலுடன் சோனாலி குல்கர்ணி, மணிகண்டன் ஆர் ஆச்சாரி, ஹரிஷ் பேரழி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. வரும் 25-ம தேதி இப்படம் வௌியாக உள்ள நிலையில், கேரளாவில் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் வெளியீட்டுக்கு முன்பே ஒரு கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது.

MUST READ