spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதங்கலான் படத்திற்கு வெறித்தனமாக டப்பிங் கொடுக்கும் மாளவிகா.... வீடியோ ரிலீஸ்....

தங்கலான் படத்திற்கு வெறித்தனமாக டப்பிங் கொடுக்கும் மாளவிகா…. வீடியோ ரிலீஸ்….

-

- Advertisement -

தங்கலான் திரைப்படத்திற்கு நடிகை மாளவிகா மோகனன் டப்பிங் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

we-r-hiring

 

கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையமாகக் கொண்டு தங்கலான் திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு ஏற்பட்ட விபத்தினால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் சில வாரங்கள் கழித்து சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்திற்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வௌியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படத்தில் நடிகர் விக்ரமுக்கு அதிக அளவில் வசனங்கள் இல்லாததால், அவரின் டப்பிங் ஏற்கனவே முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்திருந்தது.

MUST READ