அதர்வா மற்றும் மணிகண்டன் கூட்டணியில் மத்தகம் என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இதில் அதர்வா மற்றும் மணிகண்டன் உடன் இணைந்து நிகிலா விமல், கௌதம் வாசுதேவ் மேனன், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது. தர்புகா சிவா இதற்கு இசையமைத்துள்ளார். இந்த வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 100, ட்ரிகர் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிகண்டன், குட் நைட் படத்திற்கு பிறகு இதில் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இந்த டீசரின் மூலம் படமானது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள் குறித்து பேசக் கூடியது என்று தெரியவந்துள்ளது. இந்த டீசரின் முடிவில் இது ஒரு நீள் இரவு என்று குறிப்பிடப்படுகிறது. இந்த டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.