Homeசெய்திகள்சினிமாரிலீஸ் தேதியை லாக் செய்த மணிகண்டனின் 'குடும்பஸ்தன்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரிலீஸ் தேதியை லாக் செய்த மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் குடும்பஸ்தன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ரிலீஸ் தேதியை லாக் செய்த மணிகண்டனின் 'குடும்பஸ்தன்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மணிகண்டன் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். ஆனால் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் தான் மணிகண்டனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. இந்த படத்திற்குப் பிறகு மணிகண்டனுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன்படி குட் நைட், லவ்வர் என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்டார். அடுத்ததாக இவரது நடிப்பில் குடும்பஸ்தன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ராஜேஸ்வர் காளிசாமி இயக்க சினிமாக்காரன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ரிலீஸ் தேதியை லாக் செய்த மணிகண்டனின் 'குடும்பஸ்தன்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சுஜித் என் சுப்பிரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க வைஷாக் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் ஜீரோ பேலன்ஸ் ஹீரோ எனும் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ