Homeசெய்திகள்சினிமாமணிகண்டன் நடிக்கும் லவ்வர்... முதல் தோற்றம் வெளியானது...

மணிகண்டன் நடிக்கும் லவ்வர்… முதல் தோற்றம் வெளியானது…

-

- Advertisement -
மணிகண்டன் ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த குட் நைட் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்குகிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்ஆர்பி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு இசையமைக்கிறார். இந்த புதிய படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து கௌரி பிரியா ரெட்டி, கண்ணன் ரவி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இதற்கிடையில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான இந்த குட் நைட் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மணிகண்டனின் எதார்த்தமான நடிப்பு பலரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், குட் நைட் படத்தைத் தொடர்ந்து மணிகண்டன் நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் வௌியாகி உள்ளது. படத்திற்கு லவ்வர் என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ