இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்!
கிங்ஸ்டன்
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கிங்ஸ்டன். கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படம் இந்தியாவின் முதல் கடல் சாகச படமாகும். இப்படம் இன்று (மார்ச் 7) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஜென்டில்வுமன்
சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லிஜோ மோல் நடித்துள்ள திரைப்படம் தான் ஜென்டில்வுமன். இந்த படத்தில் லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அறிமுக இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் இப்படம் இன்று (மார்ச் 7) திரையரங்குகளில் வெளியாகிறது.
நிறம் மாறும் உலகில்
அறிமுக இயக்குனர் பிரிட்டோ இயக்கத்தில் பாரதிராஜா, நட்டி நடராஜ், யோகி பாபு, கனிகா, சாண்டி மாஸ்டர், ரியோ ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் தான் நிறம் மாறும் உலகில். நான்கு விதமான கதைகளில் உருவாகியுள்ள இப்படம் இன்று (மார்ச் 7) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
லெக் பீஸ்
யோகி பாபு நடிப்பில் ஸ்ரீநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லெக் பீஸ். இதில் யோகி பாபு உடன் இணைந்து ரவி மரியா, மொட்ட ராஜேந்திரன், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று (மார்ச் 7) திரையரங்குகளில் வெளியாகிறது.
எமகாதகி
பெப்பின் ராஜ் ஜெயசீலன் இயக்கியுள்ள திரைப்படம் தான் எமகாதகி. சூப்பர் நேச்சுரல் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நரேந்திர பிரசாத், ஹரிதா, கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் (இன்று) மார்ச் 7 திரையரங்குகளில் வெளியாகிறது.
மர்மர்
மர்மர் திரைப்படமானது தமிழில் உருவாகி இருக்கும் முதல் பவுண்டு புட்டேஜ் திரைப்படம் ஆகும். ஹேமந்த் நாராயணன் இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படம் இன்று (மார்ச் 7) திரையரங்குகளில் வெளியாகிறது.