இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மாநாடு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் இவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்கள் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அடுத்ததாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசருடன் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து படம் தொடர்பான பல அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ரஜினி இந்த படத்தில் நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் நாகார்ஜுனா நடிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் லோகேஷ் கனகராஜ் நாகார்ஜுனாவை கூலி படத்தில் நடிக்க வைக்க அவரை அணுகி கூலி படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்து விவரித்தாராம். ஆனால் இந்த கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் போல் இருக்கும் காரணத்தால் நடிகர் நாகார்ஜுனா கூலி படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே லோகேஷ் கனகராஜ், வேறொரு தெலுங்கு நடிகரை வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.