spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபெண்களிடம் அத்துமீறும் பிரபல நடிகர்.... அடுக்கப்படும் குற்றச்சாட்டு!

பெண்களிடம் அத்துமீறும் பிரபல நடிகர்…. அடுக்கப்படும் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

நடிகர் ஜான் விஜய் பெண்களிடம் அத்துமீறுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.பெண்களிடம் அத்துமீறும் பிரபல நடிகர்.... அடுக்கப்படும் குற்றச்சாட்டு!

நடிகர் ஜான் விஜய் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கக் கூடியவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்த பிரபலமானவர். தமிழில் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தில்லாலங்கடி, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு, பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெண்களிடம் அத்துமீறும் பிரபல நடிகர்.... அடுக்கப்படும் குற்றச்சாட்டு!இந்த ஆண்டு வெளியான வடக்குப்பட்டி ராமசாமி, சிங்கப்பூர் சலூன், வித்தைக்காரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் ஜான் விஜய் பல சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே இவர் மீது meToo குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும் தற்போதும் இவர் பெண்களிடம் அத்துமீறுவதாகவும் குற்றச்சாட்டை இழந்துள்ளது. இது தொடர்பாக பிரபல பாடகி சின்மயி பெண்களுக்கு நடக்கும் இது போன்ற பாலியல் துன்புறுத்தலங்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.

we-r-hiring

அதாவது ஜான் விஜயினால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் தன்னிடம் பாலியல் குற்றச்சாட்டு குறித்து பகிர்ந்துள்ளதாக சின்மயி தெரிவித்திருக்கிறார். மேலும் தனது சமூக வலைதள பக்கத்தில் பெண்கள் சிலர் அனுப்பிய செய்திகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த தகவல் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ