Homeசெய்திகள்சினிமாலோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படம் – இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பரபரப்பு அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படம் – இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பரபரப்பு அப்டேட்!

-

- Advertisement -

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் G Squad தயாரிப்பு நிறுவனம் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

we-r-hiring

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இயக்குகிறார். நாசர், ரெஜினா கேசன்ட்ரா, ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதமே தொடங்கியதாகவும், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் படக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரிஹரன் ராஜு கதை எழுதியுள்ள இப்படத்திற்கு எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஹேசம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பையும், கே.மனோஜ் குமார் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல்வேறு திரைப்படங்களை முன்னெடுத்து வருகிறார். அந்த வரிசையில் விஷால் வெங்கட் இயக்கும் இந்த புதிய படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி – அக்டோபர் 11-ல் சென்னை வருகை!

MUST READ