Homeசெய்திகள்சினிமாதசரா பட முன்னோட்டம் நாளை வெளியீடு

தசரா பட முன்னோட்டம் நாளை வெளியீடு

-

- Advertisement -

தசரா பட முன்னோட்டம் நாளை வெளியீடு

நானி நடிப்பில் உருவாகியிருக்கும் தசரா படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது.

சினிமா உலகில் முன்னணி ஸ்டார்களாக வலம் வருபவர்கள் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இருவரும் ’தசரா’ என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இப்படம் வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நானி தற்போது ‘தசரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தசரா‘ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடித்திருக்கிறார்.

மேலும், இப்படத்தில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் மார்ச் 14-ம் தேதி நாளை தசரா படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது. இதனால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

MUST READ