Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்'.... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

-

- Advertisement -
பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் படத்தின் முதல் தோற்றம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

டோலிவுட் எனும் தெலுங்கு திரை உலகில் குறுகிய வட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த பிரபாஸை ஒரு பான் இந்தியா நடிகராக உயர்த்தியது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் வெற்றி பிரபாஸின் இமேஜை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா அளவில் வெளியிடப்படுகிறது. பாகுபலியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம், ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைபெற்றன. இதையடுத்து, இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சலார்.

பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படத்தில் பிருத்விராஜ், ஸ்ரேயா ரெட்டி, ஸ்ருதி ஹாசன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, பிரபாஸ் நடிக்கும் இப்படத்திற்கு ராஜா சாப் என்று தலைப்பு வைத்துள்ளனர். அத்துடன் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மாருதி இயக்கும இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபாஸூடன், மாளவிகா மோகனன், நிதி அர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.

MUST READ