spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிரைவில் தொடங்கும் பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு.... எப்போன்னு தெரியுமா?

விரைவில் தொடங்கும் பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு…. எப்போன்னு தெரியுமா?

-

- Advertisement -

ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.விரைவில் தொடங்கும் பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு.... எப்போன்னு தெரியுமா?

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ‘கல்கி 2898AD’ திரைப்படம் வெளியாகி அதிக வசூலை வாரிக் குவித்தது. அடுத்தது 2026 ஜனவரி 9ஆம் தேதி பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தி ராஜாசாப்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் அர்ஜுன் ரெட்டி, அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் எனும் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படமானது பிரபாஸின் 25வது படமாக உருவாக இருக்கிறது. விரைவில் தொடங்கும் பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு.... எப்போன்னு தெரியுமா?இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருடன் இணைந்து திருப்தி டிம்ரி நடிக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மடோனா செபாஸ்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இவ்வாறு இந்த படம் தொடர்பான பல அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்தாலும் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. விரைவில் தொடங்கும் பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு.... எப்போன்னு தெரியுமா?அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத (நவம்பர்) இறுதியில் தொடங்கும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ