Homeசெய்திகள்சினிமாவாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம்: நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம்: நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

-

- Advertisement -

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூருவில் தனது வாக்குரிமை பறிபோயிருப்பதாகக் கூறி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்

இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின் போது, வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயர் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

“நான் பெங்களூருவிலேயே பிறந்து, அங்கேயே எனது கல்வியை முடித்தவன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் எம்பி வேட்பாளராகப் போட்டியிட்டவன் நான். ஆனால், தற்போது வாக்காளர் பட்டியலிலிருந்து எனது பெயரே நீக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தை இனி தொடங்குங்கள். எனது வாக்காளர் அடையாளத்தை மீண்டும் பெறுவதற்கு நான் என்னென்ன ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்” என்று அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்திற்கு எதிரான கேள்வி

தொடர்ந்து பேசிய அவர், அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு குடிமகனின் வாக்குரிமையைத் தற்காலிகமாகத் தடுத்துவிட முடியும் என்று ஆட்சியாளர்கள் நினைக்கலாம்; ஆனால், அந்த அதிகாரத்திற்கு எதிரான மக்களின் குரலையோ அல்லது அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்றும் மாபெரும் ஜனநாயக சக்தியையோ யாராலும் தடுத்துவிட முடியாது என்று கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த அதிரடிப் பதிவு, தற்போதைய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தெருப் பெயர்களில் சாதிப் பெயர்களை அகற்றும் உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

MUST READ