spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் 'சத்திய சோதனை'... ரிலீஸ் தேதி அப்டேட்!

பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் ‘சத்திய சோதனை’… ரிலீஸ் தேதி அப்டேட்!

-

- Advertisement -

பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் ‘சத்திய சோதனை‘ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரேம்ஜி தற்போது சத்திய சோதனை எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் பிரேம்ஜியுடன் இணைந்து ரேஷ்மா பசுபுலேட்டி, ஸ்வயம் சித்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

we-r-hiring

இப்படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனத்தின் கீழ் சமீர் பரத் ராம் தயாரித்துள்ளார். ஆர் பி சரண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுராம் இதற்கு இசை அமைத்துள்ளார்.
கொரோனா காலகட்டத்திலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
அதைத்தொடர்ந்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில்,
சில மாதங்களுக்கு முன்பாக இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ