Homeசெய்திகள்சினிமாபிருத்விராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம்... புதிய போஸ்டர் வைரல்...

பிருத்விராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம்… புதிய போஸ்டர் வைரல்…

-

மலையாள திரையுலகின் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். 90-களில் தொடங்கி இன்றுவரை ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி தமிழிலும் பிருத்விராஜ் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அண்மைக் காலமாக அவர் வில்லன் வேடத்தில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். தெலுங்கு படமான சலார் திரைப்படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக நடித்தார். இதில், பிருத்வியின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதனிடையே நடிப்பை தவிர இயக்கத்திலும் பிருத்விராஜ் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனிடையே, பிருத்விராஜ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ஆடு ஜீவிதம். அரபு நாட்டுக்கு வேலை செல்லும் கதாநாயகன் அங்கு ஆடு மேய்க்க விடப்பட்டு பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு, அங்கிருந்து தப்பிப்பது தான் கதை. படத்தில் அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். பிரபல எழுத்தாளர்‌ பென்‌ யாமின்‌ எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ப்ளஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார்.

இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே இப்படம் வரும் மார்ச் மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ