spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

-

- Advertisement -

ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பன்முகத்திறமைகளை கொண்டிருக்கிறார்.பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்! இவரது நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் காஞ்சனா 4 திரைப்படத்தினை இயக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தான் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கில் (KILL) எனும் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராகவா லாரன்ஸின் 25வது படமாக உருவாகும் இந்த படத்தினை கோனேரு சத்ய நாராயணா தயாரிக்கப் போவதாகவும் தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இப்படத்தினை இயக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்! மேலும் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கப்படும் எனவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகள் குறித்த விபரங்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ