டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டிமான்ட்டி காலனி. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அஜய் ஞானமுத்து, அருள்நிதி கூட்டணியில் உருவாகி இருந்த டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்தது. வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி ஜீ5 – இல் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தினை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்திருந்தது ஷாம் சி எஸ் இதற்கு இசையமைத்திருந்தார். ஹரிஷ் கண்ணன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.