spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆர்சி 15 படத்தின் டைட்டில் வெளியீடு

ஆர்சி 15 படத்தின் டைட்டில் வெளியீடு

-

- Advertisement -

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம் ‘ஆர்சி 15’. இப்படத்தின் படப்பிடிப்பு அதி வேகமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்குகிறார். இப்படத்தை வாரிசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமான பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

we-r-hiring

ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆர்சி15 படத்தின் பெயர் குறித்த தகவல் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு சிஇஒ (CEO – Chief Electoral Officer) என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மார்ச் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

MUST READ