Homeசெய்திகள்சினிமாஅர்ஜூன் தாஸின் ரசவாதி... புதிய பாடல் ரிலீஸ்...

அர்ஜூன் தாஸின் ரசவாதி… புதிய பாடல் ரிலீஸ்…

-

அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரசவாதி படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.

கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். அவரது கர்ஜிக்கும் குரலுக்கு தமிழகத்தில் பல்லாயிரம் ரசிகர்கள் உள்ளனர். கைதி படத்தில் வில்லனாக நடித்த அவர், தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து, அந்தகாரம் படத்தில் நாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.

மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் கவனம் பெற்றவர் இயக்குநர் சாந்தகுமார். இவர் இயக்கவுல்ள மூன்றாவது படத்தில் அர்ஜன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை டிஎம்ஏ மெக்கானிக் கம்பெனி தயாரிக்கிறது. இதில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். சிவா படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ரசவாதி படத்திலிருந்து, சாரல் சாரல் எனத் தொடங்கும் புதிய பாடல் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இத்திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ