Homeசெய்திகள்சினிமாநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

-

- Advertisement -
கோலிவுட்டின் பெரும் நட்சத்திர தம்பதி நயன்தாரா – விக்னேஷ் சிவன். லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர். சினிமாவில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவனும் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.

இது தவிர இந்த நட்சத்திர தம்பதியினர் ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள் தயாரித்த கூலாங்கள் திரைப்படம் அண்மையில் வெளியானது. ஆனால், வெளியீட்டிற்கு முன்பாகவே இத்திரைப்படம் பல சர்வதேச விருது விழாவில் தேர்வாகி பல விருதுகளை வென்றுள்ளது. இதுமட்டுமன்றி, லிப் பாம் கம்பெனி, டிவைன் புட்ஸ், நயன் ஸ்கின் என பல தொழில் நிறுவனங்களையும் தொடங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில், விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட இருவரும், அண்மையில் குமரி மற்றும் திருச்செந்தூர் கோயில்களுக்கு சென்றுசாமி தரிசனம் செய்தனர். அது தொடர்பான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்துள்ளனர். நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் டெஸ்ட் திரைப்படம் விரைவில் திரையரங்குகளுக்கு வரவுள்ளது.

MUST READ