Homeசெய்திகள்சினிமாஜெட் வேகத்தில் விஎஃப்எக்ஸ் பணிகளை நிறைவு செய்த 'கோட்' படக்குழு!

ஜெட் வேகத்தில் விஎஃப்எக்ஸ் பணிகளை நிறைவு செய்த ‘கோட்’ படக்குழு!

-

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜெட் வேகத்தில் விஎஃப்எக்ஸ் பணிகளை நிறைவு செய்த 'கோட்' படக்குழு!இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பாக வெளிவரும் அப்டேட்டுகளும் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வரும் நிலையில் இதில் நடிகை திரிஷாவும் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு விஜயகாந்த் இதில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தோன்ற உள்ளார் என்று செய்திகள் வெளியானது. பின்னர் படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருவதாக ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இவ்வாறு பல அப்டேட்டுகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையில் படத்தில் விசில் போடு எனும் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படமானது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அப்டேட் கிடைத்தது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் ஜெட் வேகத்தில் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் விஎஃப்எக்ஸ் செய்யப்பட்ட விஜயின் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ