Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி நடிக்கும் ஏஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ...

விஜய் சேதுபதி நடிக்கும் ஏஸ்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…

-

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபடி நடிக்கும் 51-வது படத்திற்கு ஏஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டு, டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 
கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ருக்மணி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். ஒரு சில காரணங்களால், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் டைட்டில் போஸ்டருடன் வெளியாகியாயுள்ளது. படத்திற்கு ஏஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

MUST READ