சமந்தா தவறுதலாக வெளியிட்ட புகைப்படம்… இணையத்தில் டிரெண்டிங்…
- Advertisement -

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமான அவர், மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து சமந்தாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தமிழில் ஒரு முன்னணி நடிகையாக உயரத் தொடங்கினார். தமிழில் உச்சம் தொட்ட அதே நேரத்தில் தெலுங்கிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார்.

தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. பேமிலி மேன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து பாலிவுட் பக்கம் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தற்போது சிட்டாடெல் இந்தியா என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். இதனிடையே உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது நடிப்பில் கவனத்தை குறைத்துவிட்டு, சிகிச்சை, சுற்றுலா, உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தா ஆடையில்லாத புகைப்படத்தை தவறுதலாக பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட அவர் உடனடியாக அதை நீக்கியும் உள்ளார். குளியல் தொட்டியில் இருந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டு பின்னர் அதை பார்த்த சமந்தா சமூக வலைதளத்திலிருந்து நீக்கி இருக்கிறார். இருப்பினும், கனநொடியில் அது டிரெண்டாகி உள்ளது. மேலும், இது தொடர்பாக பதிவிடும் சமந்தாவின் ரசிகர்கள், அது மார்பிக் என்று தெரிவித்து வருகின்றனர்.