- Advertisement -
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி திருவோத்து. தனது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. தொடர்ந்து, சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான உயரே திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. சினிமா மட்டுமல்லாது சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், சமூக பிரச்னைகள் என அனைத்திற்கும் பார்வதி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது பா ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.