Homeசெய்திகள்சினிமாசந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.... டிரைலர் குறித்த அறிவிப்பு!

சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’…. டிரைலர் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.... டிரைலர் குறித்த அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் காமெடியனாக தனது திரை பயணத்தை தொடங்கிய சந்தானம் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி, நிழல்கள் ரவி, யாஷிகா, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். பிரேம் ஆனந்த் இந்தப் படத்தை இயக்க ஆர்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஆஃப்ரோ இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்களைப் போல் ஹாரர் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.... டிரைலர் குறித்த அறிவிப்பு!அதன்படி வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த படமானது தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ