புத்தம்புது தோற்றத்தில் நடிகர் சசிகுமார்… புகைப்படங்கள் வைரல்…
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி இன்று நடிகராக கலக்கி வருபவர் சசிகுமார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதைத்தொடர்ந்து 2010ல் ஈசன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று தந்தது. அதன் பிறகு நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சுந்தர பாண்டியன், நாடோடிகள் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான அயோத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், படத்தில் சசிகுமாரின் நடிப்பும் பெரிதளவில் பேசப்பட்டது. இப்படத்திற்காக பல விருதுகளும் கிடைத்தன. இதைத் தொடர்ந்து நா நா, எவிடென்ஸ், நந்தன் உள்பட பல படங்களில் சசிகுமார் நடித்திருக்கிறார். தற்போது சூரியுடன் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கும் கருடன் திரைப்படமும் திரையரங்குகளில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சசிகுமார் முற்றிலும் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆளே அடையாளம் தெரியாத அளவு இந்த புகைப்படங்கள் உள்ளன. இது சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்திற்கான தோற்றமா என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.